அடுத்த மேயர் மிஸஸ் சோனாலி தானா? – முட்டி மோதும் சீனியர்கள்

0
188

போட்டி

அடுத்த சென்னை மேயர் யார் என்ற விவகாரம் ஓடிகொண்டிருக்கிறது. இந்த நிலையில் அடுத்த கோவை மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த பதவிக்கான போட்டி திமுகவை போல அதிமுகவிலும் எழுந்துள்ளது.

சீனியர்கள்

மேயர் பதவியில் உட்கார வைக்க முக்கிய நபர்களை தேர்தெடுக்க முடிவு செய்துள்ளார் மு.க ஸ்டாலின். சீனியர்கள், விஐபிக்கள் பலர் இந்த வகையில் ரேஸில் உள்ளனர்.

அதிமுக

அதிமுக கட்சியிலும் இந்த போட்டி எழுந்துள்ளது. வலுவான ஒரு நபரை மேயர் பதவியில் வைக்க அதிமுக யோசித்து வருகிறது. இதன் அடிப்படையில் சில பெயர்கள் அடிபட்டு வருகிறது.

சோனாலி பிரதீப்

இவர் ஒரு சமூக ஆர்வலர். கல்வியாளர் என்ற அறிமுகத்துடன் நடமாடும் பெண்மணி. கோவையில் அதிமுக கூட்டம் எங்கு நடந்தாலும் அங்கே அவர் வருவார். இவர் அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் பெற்றவர். 2019 ம் ஆண்டு மிஸஸ் இந்தியா, மிஸஸ் யுனிவெர்ஸ் பியூட்டி பர்பஸ், மிஸஸ் இந்தியா தமிழ்நாடு என பல பட்டங்களை பெற்றவர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். தமிழ்நாட்டிற்கு 2 தலைமுறைகளுக்கு முன்பே வந்துவிட்டார்.

முயற்சி

இவரது கணவர் பிரதீப் ஜோஸ் மலையாள சினிமா ப்ரொடியூசர். சோனாலிக்கு அரசியலில் ஆர்வம் அதிகமானதால் இதில் இணைந்துள்ளார். இவர் கோவை இளைஞர் , இளம் பெண்கள் பாசறையின் இணை செயலாளராக இருக்கிறார். 2019 கோவை மேயர் பதவிக்கு விருப்ப மனு தந்தபோது இவரை பலருக்கு தெரியவந்தது. இவர் மேயர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

மேடையில் அமர்ந்த சோனாலி

முன்னாள் அமைச்சர் ஒருவர் உதவியுடன் மேயர் பதவிக்கு முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்துள்ளது. அந்த கூட்டத்தில் சோனாலி மட்டும் மேடையில் ஏறி அமர்ந்துள்ளதாக தெரிகிறது.

முணுமுணுப்புகள்

பணமிருந்தால்தான் மரியாதையா என்ற வேதனைகளும் கோவை மாவட்டத்தில் தொடங்கி உள்ளது. ஆர்ப்பாட்டம் ,போராட்டம், கைது என எதாவது செய்யட்டும் அப்புறம் மேயர் பதவிக்கு ஆசைப்படலாம் என முணுமுணுப்புகள் எழுந்துள்ளன.

விளக்கம்

மேடையில் உட்கார்ந்தது எதிர்ச்சையாக நடந்தது திட்டமிட்டு செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேயர் பதவி யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.கோவை மக்களுக்கு நன்கு பரிச்சயமான திமுகவுக்கு டஃப் தரும் வகையிலான ஒரு முக்கிய நபரையே, மேயராக முன்னிறுத்தக்கூடும் என்று ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

பாராட்டு

கடந்த முறை மேயர் பதவிக்கு மனு தந்தபோதே பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.மிஸஸ் இந்தியா பட்டம் வென்றபோது முதல்வர் பழனிசாமி சோனாலினியை பாராட்டி வாழ்த்தியிருந்தார். உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த சமயம் சோனாலி பிரதீப் மேயர் பதவிக்கு மனு அளித்தபோது பல விமர்சனங்களை முன்வைத்திருந்தது.

ஆர்வம் காட்டவில்லை

மேயர் பதவிக்கு முன்புபோல அதிமுகவில் யாரும் ஆர்வம் காட்டவில்லை என சொல்கிறார்கள். திமுக வலுவாகி உள்ள நிலையில், பொறுப்பாளரான செந்தில்பாலாஜியின் பலவித வியூகங்கள் கைகொடுத்து வருகிறது. வழக்கமாக போட்டியிட விருப்பம் தெரிவிக்கும் நிர்வாகிகள் பலரும் இந்த முறை ஒதுங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here