அரசின் டிவிட்டர் பக்கம் செய்த குளறுபடி – சீன விமான நிலையம்

0
120

உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்த நகர் ஜெவாரில் நொய்டா சர்வதேச விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.பல்வேறு செய்திகள் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவலாக பதியப்பட்டிருந்தன. அதில் பகிரப்பட்ட ஒரு டிவிட்டர் பதிவானது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது.

முதலில் அதிர்ச்சியடைந்தவர்கள் பின் கலாய்த்து நையாண்டி பதிவுகளை போட தொடங்கினர். அந்த பதிவினை அனைவரும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து பகிர்ந்து வருகின்றனர்.

@MyGovHindi என்ற மத்திய அரசின் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்ட பதிவில் பெய்ஜிங் ஸ்டார்ஃபிஷ் விமான நிலையத்தின் புகைப்படங்கள் பலராலும் பகிரப்பட்டு வந்தது. இதனால் அந்த ட்வீட் நீக்கப்பட்டது.

பிரதமர் அடிக்கல் நாட்டிய நொய்டா சர்வதேச விமான நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய விமான பராமரிப்பு மையமாக இருக்கும் என்று தெரிவித்தார். மேற்கு உத்திரபிரதேசத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த திட்டம் மூலமாக பயனடைவர் என்று தெரிவித்தார்.

1,330 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் நொய்டா சர்வதேச விமான நிலையம் ஆசியாவின் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.2024 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் இந்த விமான நிலையம் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளுடன் கட்டப்படும் இந்த விமான நிலையம் டெல்லி சர்வதேச விமான நிலையத்தை விட பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த விமான நிலையத்தை அரசியல் நோக்கிற்காக கட்டப்படவில்லை என பிரதமர் மோடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here