ஐசிசி எடுத்த முடிவில் ஜாக்பாட் யாருக்கு? – திடீர் முடிவு

0
148

ஐசிசி உயர் அதிகாரி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கிரிக்கெட் போட்டிகளுக்கான மீடியா உரிமத்தை இந்தியாவிற்கும், இந்தியாவை தவிர பிற நாடுகளுக்கும் தனித்தனியாக ஏலம் விட முடிவு செய்துள்ளது.

அதிக வருமானம்

ஐசிசி -யின் இந்த முடிவு அதிகப்படியான வருமானத்தை ஈட்டி தரும் என தெரிகிறது.

இந்தியாவின் பங்கு

உலகளவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா ஆகிய நாடுகளின் வாயிலாக தான் அதிக வருமானத்தை பெறுகின்றனர். இதில் இந்தியா அதிக பங்களிப்பை தருகிறது.

போட்டி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலைன்ஸ் ஒளிபரப்பாளர்கள் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளின் மீடியா ரைட்ஸ் பெறுவதில் பெரிய போட்டியிருக்கும்.

மாற்றம்

கிரிக்கெட் போட்டிகளின் மீடியா ரைட்ஸ் ஏலத்தில் ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும். இந்த போட்டி மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருகை பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

ஏலம்

2024 முதல் நடக்கும் ஒளிபரப்பு, டிஜிட்டல் ஏலத்தில் இந்தியாவை தனியாக ஒரு ஏலமாகவும், மற்ற நாடுகளை தனி ஏலமாகவும் நடத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதிக வருமானத்தை பெற திட்டமிட்டுள்ளது.

விண்ணப்பம்

ஐசிசி -யின் இந்த புதியமுறை ஏலம், ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலத்தை முடித்த பின்பு நடக்க உள்ளது. மீடியா ரைட்ஸ்-ஐ பெற விரும்புவோர் 8 வருடத்திற்கான திட்டத்தை தேர்வு செய்து விண்ணப்பம் செய்ய வாய்ப்புக்கள் உள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள்

ஸ்டார் இந்தியா, சோனி பிக்சர்ஸ் மட்டும் அல்லாமல் அமேசான் மற்றும் பேஸ்புக் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களும் இறங்க முடிவு செய்துள்ளது.

மீடியா ரைட்ஸ்

2015-2023 ம் ஆண்டுக்கான மீடியா ரைட்ஸ்-ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சுமார் 2.02 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது. அடுத்த ஏலத்தில் இந்தியாவிற்கான மீடியா ரைட்ஸ் 1.2-1.8 பில்லியன் டாலர் வரையில் இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஜாக்பாட்

யுஏஇ டி20 போட்டியிலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் புதிதாக ஒரு அணியை பெற உள்ளது. இந்தியா, பிற நாடுகளுக்கான ஏலத்தை தனியாக பிரித்த நிலையில் ரிலையன்ஸ் ஏலத்தில் வெற்றிப்பெற வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

வர்த்தகம்

ரிலையன்ஸ்-க்கு பிற நாடுகளில் வர்த்தகம் இல்லாத காரணத்தால் பின்னடைவாக வாய்ப்பு உள்ளது. அமேசான், பேஸ்புக், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனிக்கு பிற நாடுகள் வர்த்தகம் கிடைத்தால் ஜாக்பாட் தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here