கூகுளில் தேடப்பட்டவர்களில் தங்க மகன் ரீரஜ் சோப்ரா முதலிடம்

0
111

வருத்தம்

நடந்து வரும் ஒலிம்பிக்கில் போட்டிகளில் இந்தியா ஒரு தங்கப்பதக்கம் கூட வென்றதில்லை என்ற வருத்தம் 130 கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு இருந்தது.

பெருமை

இதனை போக்கியவர் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.ஆகஸ்ட் மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பெருமை தேடி தந்தார்.

குற்றம்

ஹிந்தி நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யான் கான் அக்டோபர் மாதம் மும்பையில் கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யான் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

கூகிள் தேடல்

இந்தியாவில் கூகுள் தேடுதளத்தில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இதில் முதலிடத்தை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தை ஆர்யான் பிடித்துள்ளார்.

பட்டியல்

பஞ்சாபி பாடகி ஷெஹ்நாஜ் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவரது காதலன் சித்தார்த் சுக்லா மாரடைப்பால் இறந்தார். ஹிந்தி நடிகையின் கணவரும் ,ஆபாச படங்களை தயாரித்ததாக கைது செய்யப்பட்டவருமான ராஜ் குந்தரா, ஹிந்தி நடிகருமான விக்கி கவுசல் ஆகியோரும் அதிகம் தேடியவர்கள் பட்டியலில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here