கொல்கத்தாவில் நடைபெற்ற டி20 தொடரை வென்ற இந்தியா

0
192

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தியா நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இஷான் கிஷனுக்கும் அஸ்வினுக்கும் பதிலாக சாஹலுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. மேலும் துணை கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ரோகித் சர்மா தனது முதல் ஓவரிலே அதிரடியாக விளையாட தொடங்கினார். இந்திய அணி 6 ஓவர்கள் முடிவில் 69 ரன்களை எடுத்துள்ளது. இது இந்தியா இந்த தொடரில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும்.இஷான் மற்றும் சூரியகுமார் யாதவ் மிட்செல் சான்ட்னர் வீசிய ஒரே ஓவரில் ஆட்டத்தை இழந்தனர். நான்கு ரன்களில் ரிஷப் பண்ட் வெளியேறி உள்ளார்.

ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டியில் 26 வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். 56 ரன்களை 31 பந்துகளில் எடுத்து ரோகித் ஆட்டத்தை இழந்துள்ளார். மேலும் வெங்கடேஷ் ஐயர் 20 ரன்களையும் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களையும் அடுத்தடுத்த ஓவர்களில் எடுத்து பெவிலியன் திரும்பினார்.ஹர்சல் பட்டேல் 18 ரன்களை 11 பந்துகளில் எடுத்துள்ளார். சி.எஸ்.கே. வீரர் தீபக் சாஹர் இறுதியாக 21 ரன்களை 8 பந்துகளில் எடுத்துள்ளார். 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்களை இந்தியா எடுத்துள்ளது.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நோக்குடன் நியூசிலாந்து அணி களத்தில் இறங்கியது. புவனேஸ்வர் முதலில் 5 ரன்களை கொடுத்தார். நியூசிலாந்து அணி தீபக் சாகர் வீசிய 2வது ஓவரில் 16 ரன்கள் எடுத்தது. கடைசி பந்தில் கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் தவறவிட்டார். அக்சர் பட்டேல் வீசிய மூன்றாவது பந்தில், சாப்மமேன் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிரடியாக விளையாடி 51 ரன்கள் விளாசி குப்தில் பெவிலியன் திரும்பினார். இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வீரர்கள் பெவிலியன் திரும்பி விட்டனர். 111 ரன்களில் 17.2வது ஓவரில் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்தது.73 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தொடரை முழுமையாக விளையாடி வென்றுள்ளது. அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். டி20 உலகக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்த இந்திய அணி பழியை தீர்த்து கொண்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here