யானைகள்
காடுகளை பாதுகாக்கவும், வனப்பரப்பை அதிகரிப்பதிலும் யானைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. யானைகள் அதிகரித்தால் தான் காடுகள் வளர்ச்சியடையும்.
ரயில்
தென்னக ரயில்வேயை பொறுத்தவரையில் மூன்று ரயில் வழித்தடங்கள் அடர்த்த வனப்பகுதிகள் வழியாக செல்கின்றன. இதில் கோவை- பாலக்காடு வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, காட்டு யானைகள் உயிரிழப்பது நடைபெற்று வருகிறது.

விபத்து ஏற்பட காரணம்
அடர் வனப்பகுதி என்பதால் வளைவுகளில் தூரத்தில் பார்வை தெரியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் ரயிலின் விளக்குகளுக்கு அருகில் வந்த பிறகு தான் கண்டுபிடிக்க முடிகிறது. யானைகள் இறங்கி செல்லும் வகையில் சரிவுகள் இல்லாதது போன்றவை முக்கிய காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளது.
சிக்கும் நிலை
தொழிற்சாலைகள் வனப்பகுதிக்குள் நடைபெறும் போது யானைகள் தங்களுடைய இருப்பிடங்களை மாற்றும் நிலை ஏற்படுகிறது. இதனால் ரயில் விபத்தில் யானைகள் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

இறப்பு
கடந்த 2002 – 2010 ம் ஆண்டு வரை 13 யானைகள் ரயிலில் மோதி இறந்துள்ளன. 2016-2021 ம் ஆண்டு வரை 8 யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளன. இவ்வாறு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது.
தீர்வு
ரயில் ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது, யானைகள் கடந்து செல்ல சுரங்கங்கள், மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். முள் செடிகள் அமைத்து யானைகள் வராதவாறு பாதுகாக்க வேண்டும்.