மண்டல – மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 16 ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டது.கோவில் திறக்கப்பட்டதால் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது யாத்திரையை தொடங்கியுள்ளனர்.கடந்த ஆண்டை போல கொரோனா மற்றும் மழை காரணமாக இணையவழி பதிவு அடிப்படையில் பக்தர்கள் மலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலத்தில் உள்ள பத்தனம்திட்டா மாவட்டம் மேலும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள அணைகளில் நீர் வேகமாக நிரம்பி வந்ததன் காரணமாக, பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல வேண்டாம் என நிர்வாகம் உத்தரவை போட்டது. அங்கு சென்ற மக்கள் அனைவரும் நிலக்கல் மலை அடிவாரத்தில் தடுக்கப்பட்டனர்.
தற்போது அங்கு மழை குறைந்து மக்கள் இயல்புநிலைக்கு திரும்பி உள்ளனர். அதனால் தடை விலக்கி கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சியராக திவ்யா அறிவித்தார். பம்பா ஆறு மற்றும் அணைகள் நீரின் அளவு கண்காணிக்கப்பட்டு பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.