சமந்தா ஆட்டம் போட்ட பாடல் – குவியும் லைக்ஸ் மற்றும் வியூஸ்

0
183

சமந்தா

சமந்தா நடனம் ஆடிய ஐட்டம் பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் படத்திலும் , ஹாலிவுட் படத்திலும் கமிட் ஆகியுள்ளார்.

விருதுகள்

தமிழ், தெலுங்கு படங்களில் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி உள்ளார். வெற்றி நடிகையான சமந்தா 30க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் சமந்தா.

நடனம்

சமந்தா அல்லுஅர்ஜூன் நடிக்கும் புஸ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். இதில் நடனம் ஆட ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.

பாடல் வரி

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள அந்த பாடல் வெளியாகியுள்ளது. ஊ அன்ட்டவா மாவா என தொடங்குகிறது பாடல். இப்பாடலில் பாவாடை ஜாக்கெட்டுகளுடன் ஆட்டம் போட்டுள்ளார் சமந்தா.

வரவேற்பு

நேற்று வெளியான இப்பாடல் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இந்த திரைப்படம் வரும் 17 ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ட்ரெயிலர்கள் நல்ல வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.

ப்ரோமோஷன்

அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்திற்கு சமந்தாவின் பாடல் பெரும் புரமோஷனாக இருக்கும் என தெரிகிறது.சேஷாசலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மரக் கடத்தலை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here