சுவாச நோய்களை போக்கும் ஸ்வாசகோச முத்திரை மற்றும் கருட முத்திரை

0
311

பூமியில் உள்ள எல்லா உயிர்களும் காற்றை சுவாசித்து தான் உயிர்வாழ்கிறது. மனிதர்களுக்கு மட்டும் பல காரணங்களால் சுவாச நோய்கள் ஏற்படுகின்றன. அவ்வாறு ஏற்படும் ஸ்வாச குறைபாடுகளை சில முத்திரைகள் போக்குகின்றன.

ஸ்வாசகோச முத்திரை:

உங்களது முதுகையும், கழுத்தையும் நேராக வைத்து சம்மணமிட்டு அமர்ந்து, இரு கைகளையும் உங்கள் தொடைகளின் மேலாக வைத்து கொள்ள வேண்டும்.இரு கைகளிலும் உள்ள நடுவிரல்கள் கட்டைவிரல்களுடன் தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டிவிரல் வெளிப்புறமாக 90% நீட்டிக்கொண்டிருக்க வேண்டும். உங்கள் கட்டைவிரல் பெருவிரலின் கடைசி ரேகையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும். மோதிரவிரல் இரண்டாவது ரேகையை தொட்டுக்கொண்டிருக்க வேண்டும்.

கண்களை மூடிக்கொள்ள வேண்டும். நமது மூச்சுக்காற்றை மெதுவாகவும், ஆழமாகவும் உள்ளே இழுத்து பின் மெதுவாக வெளியே விட வேண்டும். இந்த ஸ்வாசகோச முத்திரையை தினமும் காலையில் 20 நிமிடம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்து வரும் போது நுரை ஈரல்கள் வலுப்பெறும், ஆஸ்துமா சில வாரங்களில் கட்டுக்குள் வரும்.

கருட முத்திரை:

சம்மணமிட்டு நிமிர்ந்து அமர்ந்து கொண்டு உங்களது கைகளை அடிவயிற்று பகுதியில் வைத்து கொள்ள வேண்டும். உங்களது இடது கை மீது வலது கையை வைக்க வேண்டும். பெருவிரல் இரண்டையும் கோர்த்து கொள்ளவும். இதனை பார்க்க கருட பறவையின் இறகுபோல் இருக்கும். இதனை சிறகு போல அசைத்து 10 முறை செய்ய வேண்டும். 20 வினாடிகள் அமைதியாக இருக்க வேண்டும். இந்த முத்திரையை ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம்.

இந்த முத்திரையானது ரத்த ஓட்டத்தை சீராக்கும், சுவாச நோய்களை குணப்படுத்தும் , செரிமான பிரச்சனைகளை போக்கும் , சோர்வுகள் போன்றவை குணமாகும். ஆஸ்துமாவை குணப்படுத்த சிறந்ததாக உள்ளது.மேலும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்வதை தவிர்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here