ரசிகர்கள் பட்டாளம்
தமிழில் களவாணி ,கலகலப்பு, மெரினா,மூடர்கூடம், மத யானைக்கூட்டம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார் ஓவியா. யாரைப் பற்றியும் கவலைப்படாத குணம், மார்னிங் டான்ஸ் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளத்தை ஆரம்பித்துக் கொடுத்தது. ஓவியா ரசிகர்கள் ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.
புகைப்படங்கள்
பிக்பாஸ்லிருந்து வெளியே வந்த ஓவியா, பல படங்களில் தொடர்ந்து வலம் வருவார் என நினைத்தார்கள். அப்படி எதுவும் நடக்கவில்லை. அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு மகிழ்வித்து வருகிறார். டாட்டூ தெரிய வெளியிட்ட புகைப்படம் மீடியாவில் வைரலாகி உள்ளது.
சமீப காலமாக புதிதாக ஒருவரை ஓவியா காதலித்து வருவதாக தெரிகிறது. அவருடன் சேர்ந்து அவ்வப்போது வெளியில் சென்று முத்தமழை புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
டாட்டூ
எதிர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வெப் சீரிஸிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். பட வாய்ப்பையும் பெற முயற்சித்து வருகிறார். தற்போது இவர் காலில் பாம்பின் டாட்டூ ஒன்றை போட்டுள்ளார். இதை பார்த்து பலர் டாட்டூ குத்த வேறு இடமே கிடைக்கவில்லையா என கிண்டலடித்து வருகிறார்கள்.
My little monster ? pic.twitter.com/kDEE2uoUHR
— Oviyaa (@OviyaaSweetz) September 21, 2020