உடலில் உள்ள கொழுப்பை அதிக அளவில் சேரவிடாமல் திராட்சை கட்டுப்படுத்துகிறது.
திராட்சையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. உடலில் ஓடுகின்ற ரத்த அழுத்தத்தை சீராகவும், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் இது உதவுகிறது.
கண்களில் உள்ள கரு விழிகளின் வளர்ச்சியை அதிகரிக்கிறது. கண் அழுத்தம், கண் புரை போன்றவை ஏற்படுவதை குறைக்கும். இதனால் கண்பார்வை தெளிவாகும்.
சோர்வடையும் போதும் , பதட்டமாகும் போதும் சில உடல்நலத்தை பாதிக்கக்கூடிய ரசாயன மாற்றங்கள் நமது உடலில் ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. திராட்சை பழம் கெட்ட ரசாயனத்தை கட்டுப்படுத்துகிறது.
நுண் கிருமிகள், வைரஸ் , பாக்டீரியா போன்றவை தொற்று நோய்களை பரப்பும் வாய்ப்புகள் உள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொற்று நோய்கள் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த தொற்று கிருமிகளை போக்கும் திறன் திராட்சையில் அதிகம் உள்ளது. தினம்தோறும் திராட்சையை சாப்பிடுவதால் நோய்எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
திராட்சை பழத்தை உலர்திராட்சையாக சாப்பிடுவதாலும் அப்படியே சாப்பிடுவதாலும் உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.
தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கு சிறுநீரகம் உதவுகிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும்.
தினமும் திராட்சை சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் வராது. சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமலும் தடுக்கும்.