திருமணத்திற்கு வருபவர்களுக்கு கண்டிஷன் போட்ட கத்ரீனா கைஃப்

0
142

எதிர்பார்ப்பு

பாலிவுட்டின் நடிகையான கத்ரீனா கைஃப் , பாலிவுட் நடிகர் விக்கி கெளஷல் திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் சில விஷயத்தை கடைபிடிக்க வேண்டும். விருந்தினர்களுக்கு கண்டிஷன் போட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. பாலிவுட் பிரபலங்கள் , ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். சில உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

பழமையான கோட்டை

பாலிவுட்டின் நடிகையான கத்ரீனா கைஃப் நடிகர் விக்கி கெளஷலை திருமணம் செய்ய உள்ளார்.இந்த திருமணம் டிசம்பர் 7 – 9ம் தேதி வரை சிக்ஸ் சென்ஸ் எனும் 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் நடைபெற உள்ளது. டிசம்பர் 6ம் தேதி மணமக்கள் அங்கே செல்கின்றனர்.

அதிக விலை

ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் உள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டை பர்வாராவில் அதிக பொருட்செலவில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது. விடுதியின் ஒரு நாள் வாடகை 4 லட்சம் ரூபாயாம். பிரபலங்கள், உறவினர்கள் நண்பர்கள் தங்க அந்த மாவட்டத்தில் காஸ்ட்லியான ஹோட்டல்கள் புக் செய்யப்பட்டுள்ளன.

அழைப்பு விடுக்கப்பட்ட நடிகர்கள்

சல்மான் கான் மற்றும் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர் கான், ஆலியா பட், ரன்பீர் கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்டம்

ராஜா வீட்டு கல்யாணம் போல சங்கீத், மெஹந்தி , திருமணம் என 3 நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. நட்சத்திரங்கள், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் கண்டிஷனை மணமக்கள் விடுத்துள்ளனர். இவ்வாறு தகவல்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

தடை

திருமணத்தில் கலந்து கொள்ள போகும் விருந்தினர்களுக்கு ரகசிய குறியீடு வழங்கப்படும். செல்போன் போன்ற சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமண புகைப்படங்கள் , அங்கே நடக்கும் சடங்குகள் ரகசியமாக காக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here