நைட் நேரம் பஸ்சில் தனியாக உட்கார்ந்திருந்த இளம்பெண் – நடந்தது என்ன? – ஜெயிலில் கண்டக்டர்

0
150

சர்ச்சைகள்

நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் கண்டக்டர் மற்றும் டிரைவர்களால் சர்ச்சைகள் கூடி வருகின்றன. குளச்சல் அருகே வானியக்குடியை சேர்ந்தவர் செல்வமேரி மீன் வியாபாரம் செய்து வருகிறார். குளச்சல் பஸ் ஸ்டாண்டில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக மீன் கூடைகளுடன் அரசு பஸ்சில் ஏறிய இவரை துர்நாற்றம் வீசுவதாக கூறி கண்டக்டர் அவரை இறக்கிவிட்டுள்ளார். இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் அந்த பஸ் கண்டக்டர், டிரைவர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சண்டை சம்பவம்

வடசேரியில், நரிக்குறவர் தம்பதியினர் பஸ்சில் சண்டை போட்டு கொண்டதால் அவர்களையும் கண்டக்டர் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுள்ளார். இதனால் பஸ் கண்டக்டர், டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதே போன்று இன்னொரு சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி , சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் கணிதம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக தெரிகிறது.

பயணம்

நேற்றைய தினம் விழுப்புரம் புது பஸ் ஸ்டாண்டிற்கு இவர் வந்துள்ளார். ஊருக்கு செல்வதற்காக கொத்தமங்கலம் செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். பெரும்பாக்கம் என்ற இடத்திற்கு பஸ் சென்ற போது பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டனர். இரவு 7.15 மணி அளவில் மாணவி மட்டும் பிறகு பயணம் செய்துள்ளார். மாணவி தனியாக உட்கார்ந்திருப்பதை கவனித்த கண்டக்டர் மாணவியின் அருகில் உட்கார்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதிர்ச்சி

மாணவி அதிர்ச்சி அடைந்து கண்டக்டரை தட்டி கேட்டுள்ளதால் மாணவிக்கும், கண்டக்டருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் மாணவி கணவருக்கு போன் போட்டு அங்கு நடக்கும் வாக்குவாதத்தை கேட்கும்படி செய்துள்ளார். மாணவி இறங்க வேண்டிய இடம் வந்தபிறகும் பஸ்ஸை நிறுத்தாமல் கொண்டு சென்றுள்ளார் டிரைவர் அன்புச்செல்வன்.

மக்கள் பிடித்தனர்

இதனால் மாணவி பஸ்சில் இருந்து குதித்துள்ளார். தகவலை அறிந்த கோனூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் பஸ்ஸை மடக்கிப்பிடித்தனர். டிரைவர் மற்றும் கண்டக்டரை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

வழக்கு பதிவு

போலீசார் நடத்திய விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. கண்டக்டர், டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இறுதியில் போலீசார் சிலம்பரசனை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here