காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கரூர் பள்ளி மாணவி உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினார்.
12ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் சீண்டலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த செயலானது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் தாயாருக்கு கரூர் எம்பி ஜோதிமணி ஆறுதல் அளித்துள்ளார். புகார் அளிக்க சென்ற மாணவியின் தாயாரிடம் கடுமையான வார்த்தைகளை கூறியதாகவும், காவல் ஆய்வாளர் கண்ணதாசன் அவர்களை தாக்கியதாகவும் செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் கூறினார்.மேலும் உறவினர்களை இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்ததாகவும் கூறினார். காவல் துறை கடுமையாக நடந்தால் புகார் அளிக்க யார் செல்வார்கள் என அவர் கூறினார்.
காவல் நிலைய ஆய்வாளர் கண்ணதாசனை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். மாணவியின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார். இந்தியா முழுவதும் பாலியல் குற்றங்கள் நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த கொடுமைகளை தடுக்க பெண்கள் துணிந்து புகார் கொடுக்கும் நிலைமையை கொண்டு வர வேண்டும் எனவும்,பெண்கள் மற்றும் சிறுமியர்களுக்கு உதவ ஆலோசகர்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். மேலும் மாணவிகள் படிக்கும் கல்லூரிகள் , பள்ளிகளில் விசாக கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
கரூர் பள்ளி மாணவியை தற்கொலை செய்ய தூண்டியவர்களை கைது செய்யும் வரை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராடும் என அவர் தெரிவித்தார்.