போக்குவரத்தை கண்காணிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0
416

சென்னை உயர்நீதிமன்றம் சென்னை சாலைகளில் போக்குவரத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஜி.எஸ்.டி சாலையில் புதுவை சிறு தொழில் வியாபாரிகள் சங்கம் சார்பில் சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி சாலையில் உணவக நிறுவங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், சட்ட விரோதமான வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் இந்த வழக்கை விசாரித்தார். அந்த வழக்கில் சாலைகளில் உள்ள போக்குவரத்தை கட்டுப்படுத்த சிறப்பு குழு அமைக்க நீதிபதி காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.காவல் துறையினர் மாமூல் வாங்கி கொண்டு சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்த அனுமதிப்பதாகவும், இதை தடுக்க வேண்டும் எனவும், எந்தவித கருணையும் காட்டக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வணிக நிறுவனங்கள் விதியை மீறினால் உரிய நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் அவர்களது உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். டிசம்பர் 21ம் தேதி காவல் ஆணையர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here