சோமாலியாவில் போதிய அளவிற்கு மழை பொழிவு இல்லாததால் நீர்நிலைகளில் அதிவேகமாக நீர் குறைந்து காணப்படுகிறது. வறட்சி அதிகரித்து கொண்டே வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை கூறியதாவது, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சோமாலியாவில் போதிய அளவிற்கு உணவு மற்றும் குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். உணவு , குடிநீர் இல்லாமல் கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் அடுத்த ஆண்டு 80 லட்சம் பேர் உணவு பற்றாக்குறை பிரச்சனையால் வாடலாம் என ஐக்கிய நாடுகள் எதிர்பார்க்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக சோமாலியாவில் போர்கள் நடந்து வருகின்றன. கடுமையான வறட்சி மற்றும் வெள்ளம் போன்றவற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள்.