மபி.யில் தொழிலாளியின் கை வெட்டப்பட்டது – என்ன காரணம்?

0
138

மத்தியப் பிரதேச மாநிலம், ரீவா மாவட்டத்தில் உள்ள பத்ரி கிராமத்தை சேர்ந்த அசோக் சாகட் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர். கணேஷ் மித்ரா என்பவரிடம் அசோக் சாகட் டோல்மாவ் கிராமத்தில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மித்ரா அசோக்கிற்கு சம்பள பாக்கி தர வேண்டி இருந்துள்ளது. பலமுறை கேட்டும் மித்ரா கொடுக்க மறுத்திருக்கிறார். நேற்று முன்தினம் அசோக் அவரது நண்பருடன் மித்ராவை பார்க்க சென்றுள்ளார். அசோக் சாகட் சம்பள பாக்கியை தரும்படி அவரிடம் கேட்டார். சம்பளத்தை கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மித்ராவும் மற்றும் அவரது அடியாட்கள் சேர்ந்து அசோக்கின் ஒரு கையை கத்தியால் வெட்டி துண்டித்தனர். துண்டான கையை எடுத்து மித்ராவும் அவரது அடியாட்களும் மறைத்து வைத்துள்ளனர். போலீசார் வந்து அசோக்கை மீட்டு துண்டான கையையும் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். துண்டான கை மருத்துவமனையில் அசோக்கிற்கு அறுவை சிகிச்சை மூலமாக பொருத்தப்பட்டுள்ளது. தொழிலாளியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறியுள்ளனர். 3 பேரை இது தொடர்பாக போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here