மாருதி சுஸுகி வீழ்ச்சி – கார் விற்பனை கடும் சரிவு காரணம் என்ன?

0
145

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி உள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கான தனது சேல்ஸ் ரிப்போர்ட்டை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நவம்பர் மாத விற்பனை

ஒட்டுமொத்தமாக சுஸுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 1,39,184 கார்களை விற்பனை செய்துள்ளது. இந்த விற்பனையில் உள்நாட்டு கார்களின் விற்பனை 1,13,017 ஆகும். ஏற்றுமதி செய்யப்பட்ட கார்கள் 21,393 ஆகும். டொயோட்டா நிறுவனத்திற்கு 4,774 கார்களை சப்ளை செய்துள்ளது. மொத்தத்தில் 1,39,184 கார்களை நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கூட்டணி

டொயோட்டா மற்றும் சுஸுகி ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியின் அடிப்படையில் சுஸுகி நிறுவனத்தின் கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்துள்ளது.

டொயோட்டா

மாருதி சுஸுகி பலனோ, மாருதி சுஸுகி விட்டாரா ப்ரஸ்ஸா ஆகிய கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் விற்பனை செய்கிறது. மாருதி சுஸுகி சப்ளை செய்த கார்களையும் இந்த எண்ணிக்கையில் சேர்த்துள்ளது.

செமிகண்டக்டர்

செமிகண்டக்டர் சிப் பட்டகுறையால் இந்தியாவின் மற்ற கார் நிறுவனங்களை போலவே மாருதி சுஸுகி நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கார் உற்பத்தி குறைந்துள்ளதால், சுஸுகி நிறுவனத்தின் கார் விற்பனையும் சரிவடைந்துள்ளது.

வீழ்ச்சி

கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒட்டுமொத்தமாக 1,53,223 கார்களை விற்பனை செய்தது. இந்த ஆண்டு 1,39,184 கார்களாக எண்ணிக்கை குறைந்துள்ளது.

ஆல்டோ, எஸ் -ப்ரஸ்ஸோ

ஆல்டோ மற்றும் எஸ்-ப்ரஸ்ஸோ ஆகிய இரண்டு கார்களும் 17,473 என்ற விற்பனையை கூட்டாக பதிவு செய்துள்ளன.2020 ல் 22,339 கார்கள் விற்பனை செய்துள்ளன. இது 21.78 சதவீத வீழ்ச்சி ஆகும்.
பலேனோ, செலிரியோ, ஸ்விஃப்ட், டூர் எஸ் ,வேகன் ஆர் கார்கள் கூட்டாக 57,019 என்ற விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த நவம்பர் 76,630 ஆக இருந்தது. 25.59 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது.

சியாஸ் மிட்-சைஸ் செடான்

சியாஸ் மிட்-சைஸ் காரின் விற்பனை எண்ணிக்கை 1,089 ஆக உள்ளது. இது 41.76 சதவீத வீழ்ச்சி ஆகும். கடந்த ஆண்டு 1,870 கார்களை விற்பனை செய்தது.

யுடிலிட்டி வாகனம்

மாருதி சுஸுகி நிறுவனம் யுடிலிட்டி வாகனங்கள் விற்பனையில் வளர்ச்சியை கண்டுள்ளது. எர்டிகா, எஸ்-க்ராஸ், விட்டாரா பிரெஸ்ஸா , எக்ஸ்எல்6 ஆகிய கார்கள் இதில் அடங்கும். விற்பனை நவம்பர் மாதம் 24,574 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு எண்ணிக்கை 23,753 ஆக மட்டுமே இருந்த நிலையில் இது 3.45 சதவீத வளர்ச்சியாகும்.

சுஸுகி ஈக்கோ கார்

நவம்பர் மாதம் மாருதி சுஸுகி ஈக்கோ 9,571 விற்பனையை பதிவு செய்துள்ளது. 2020ம் ஆண்டு 11,183 ஆக இருந்தது. 14.41 சதவீத வீழ்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பு

3,291 சூப்பர் கேரி வாகனங்களை விற்பனை செய்துள்ளது. விற்பனை குறைந்திருந்தாலும், வரும் மாதங்களில் சுஸுகி கார்களின் விற்பனை வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here