முதல்வர் ரூ 1 கோடி கொடுப்பதாக அறிவிப்பு

0
162

முதல்வர் மு.க ஸ்டாலின் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு நிதியாக 1 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார்.

பூமிநாதன் திருச்சி மாவட்டத்தில் திருவெறும்பூர் அருகே காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். பூமிநாதன் இரவு 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆடுகளுடன் சென்ற வாகனத்தை நிறுத்த முயன்றனர். அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் வேகமாக சென்றனர்.

இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் திருட்டு கும்பல் என்பதை பூமிநாதன் அறிந்தார். அந்த திருட்டு கும்பலை துரத்தி சென்ற போது பூமிநாதனை படுகொலை செய்தனர்.

பூமிநாதன் குடும்பத்திற்கு நிதிஉதவியாக ரூ 1 கோடி வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் 21 ஆம் தேதி அதிகாலை பூலாங்குடி காலனியில் இரவு ரோந்து பணியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார் என முதல்வர் அறிக்கையில் வெளியிட்டார்.

அப்போது அடையாளம் தெரியாத திருடர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்லும் போது பூமிநாதன் துரத்தி பிடித்துள்ளார். இந்த சம்பவத்தின்போது மர்ம நபர்கள் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டி கொலை செய்தனர். அங்கிருந்து திருடர்கள் தப்பி சென்றனர். காவல் துறையின் மூலம் இதற்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

பூமிநாதன் கொல்லப்பட்ட சம்பவத்தை அறிந்து மிகுந்த துயரமடைந்ததாகவும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும் முதல்வர் தெரிவித்தார்.

அரசு சார்பாக பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1 கோடி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தில் அரசு பணி ஒருவருக்கு வழங்கவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை 6 நபர்களிடம் நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here