குழந்தைகள்
வேலூர் கஸ்பா பஜார் தெருவில் வசித்து வருபவர் அன்சர். இவர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு சுரையா என்ற மனைவியும், 4 வயதை உடைய ஆப்ரின், 3 வயதை உடைய அசன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளன. இந்த 2 குழந்தைகளுக்கும் 2 தினமாக வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. தர்காவிற்கு குழந்தைகளை அழைத்து சென்று தாயத்து கட்டி கொண்டு வந்துவிட்டனர்.
மெடிக்கல் ஷாப்
இரு குழந்தைகளும் தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்கு செல்லாமல் மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளனர்.
மருத்துவமனை
மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் சுயநினைவை இழந்துள்ளனர். பெற்றோர்கள் இரு குழந்தைகளையும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் இரு குழந்தைகளையும் சோதித்து மருத்துவமனைக்கு வரும்போதே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விசாரணை
தகவலை போலீசார் அறிந்து பெற்றோர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர். இரு குழந்தைகளின் உடல்களும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.