கருத்து
தை காஷ்மீருடன் ஒப்பிட்டு பிரிவினைவாத காஷ்மீர்போல் தமிழகம் மாறுகிறதா என கருத்தை பதிவிட்டுள்ளார் மாரிதாஸ்.
முதல்வர் , அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் இவ்வாறு பதிவிடுவது அவதூறு பரப்பிடும் செயல் என குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சமூக ஒற்றுமையை சீரழிக்கும் செயல் என காவல் துறையில்அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
குற்றம்
சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ வெளியிட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மாரிதாஸ் மணிகண்டன் மரணம் குறித்து ஊடகங்கள் , காவல்துறை மீது குற்றம் சாட்டி பதிவிட்டிருந்தார்.
வழக்கு பதிவு
மாரிதாஸ் அந்தப்பதிவை பின்னர் அழித்துவிட்டார், மாரிதாஸின் பதிவை எடுத்த சைபர் பிரிவு போலீஸார் ஐபிசி 153 ,505/2ஆகியப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து மாரிதாஸை கைது செய்தனர்.
அவரை கைது செய்ய போலீஸார் அவரது இல்லத்துக்கு சென்றனர். பாஜக பிரமுகர் சரவணன் உள்ளிட்டோர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாரிதாஸை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பரபரப்பு
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பற்றி ட்வீட் செய்த யுடியூபர் மாரித்தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.