ரஷ்ய அதிபர் புடின் மோடியுடன் பேச்சுவார்த்தை

0
153

அடுத்த மாதம் டிசம்பர் 6ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வருகிறார். பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.

செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியது:

இந்தியா – ரஷ்யா இடையேயான மாநாடு கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடக்கவில்லை. இந்த ஆண்டுக்கான மாநாடு, அடுத்த மாதம் 6ம் தேதி டில்லியில் நடக்க உள்ளது. மோடியுடனான முதல் பேச்சுவார்த்தை இதுவாகும்.

பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் இதில் பங்கேற்பதாக தெரிகிறது. இந்த மாநாட்டில் ராணுவம், வர்த்தகம், எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் உறவை வலுப்படுத்துவது பற்றி பேசப்படும் எனவும், ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் முறையாக இரு நாடுகளுக்கு இடையே அமைச்சர்கள் அளவிலான மாநாடும் நடக்க உள்ளதாக அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here