சென்னையில் உள்ள வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு , வரும் 24ம் தேதி அரசின் கொரோனா வழிகாட்டுதலின்படி நடைபெற உள்ளது.
கற்சித்திரங்கள்
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இரண்டு ஆண்டுகளாக கோவிலுக்குள் பல்வேறு பணிகள் நடந்துள்ளன.அவற்றில், தேவர் மண்டபத்து துாண்களில் முருகப்பெருமானின் பல்வேறு பெயர்களும், அதற்கான விளக்கங்களும், முருகனின் முகங்களும் கற்சித்திரங்களாக வடிக்கப்பட்டுள்ளன. கந்தன், ஆறுமுகம், சக்தி பாலன், சண்முகம், சரவணன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், தண்டபாணி என, நாம் வணங்கும் முருகப் பெருமானைப் பற்றி நமக்கு தெரிந்தது, சில பெயர்கள்தான்.
தாரகாரமூர்த்தி
அவரது வரலாற்றைச் சொல்லும் கந்த புராணத்தை படித்தால், அந்தப் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம்.கங்கை நதிக்கு ஒப்பான சரவணப் பொய்கையில் வளர்ந்தவராதலால், காங்கேய மூர்த்தி என்றும், சூரபத்மன் வம்சத்தில் வந்த தாரகாரன் என்ற அரக்கனை வதம் செய்தவர் என்பதால், தாரகாரமூர்த்தி என்றும் அழைக்கப்படுகிறார்.
சூரபத்மனை
சூரபத்மனை வதம் செய்ய தேவர்கள் ஒன்றிணைந்து, முருகனை தலைவராக தேர்ந்து எடுத்த போது, ‘இந்திரனே தலைவராக இருக்கட்டும்; சேனைத் தலைவர்களுக்கு தலைவனாக இருந்தவர் என்பதால், தேவசேனாதிபதி என்றும் அழைக்கப்படுகிறார்.
அக்னி ஜாதாயன்
மயிலோடு நெருக்கமாக இருப்பவர் என்பதால், மயிலின் மற்றொரு பெயரான சிகியின் பெயரைக் கொண்டு, சிகிவாகணானாகவும், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட அக்னியை தாங்கியவர் என்பதால், அக்னி ஜாதாயன் என்றும் போற்றப்படுகிறார். முருகப்பெருமானின் பெயரை, மண்டபத்தில் உள்ள துாண்களில் செதுக்கியுள்ளன.
பொற்சிற்பங்கள்
இந்த சிற்பங்களின் அழகில் தங்கள் மனதை பறிகொடுக்கப் போவது நிச்சயம்.