விஜே சித்திரா நினைவுகளை எமோஷனல் ஆக பேசிய தியா மேனன்

0
185
beautiful and attractive looks tamil news - rani news

நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்து ஒரு வருடம் நிறைவடைந்தது. தற்போது அவரை நினைவுகூர்ந்து பிரபலங்கள் அனைவரும் பேசி வருகின்றனர்.

தியா மேனன் கூறியது

பதற்றம்

டிசம்பர் 9 2020 நாளின் தாக்கம் என் வாழ்வில் இன்றுவரை தொடர்கிறது. அந்த நாள் எனக்கு மறக்க முடியாத நாள். அன்று காலை 6 மணிக்கு அழைப்பு வந்தது. எனக்குள் பதற்றம் ஏற்பட்டு ஏதோ தப்பாக உணர்கிறேன்.

செய்தி

மிகவும் தயக்கத்தோடு போன்-ஐ அட்டன் செய்தேன். எந்த செய்தியை கேட்க கூடாது என நினைத்தனோ அந்த செய்தியை நண்பன் கூறினான். கை, கால்கள் நடுங்கின. என் பதட்டத்தை பார்த்து அம்மா அப்பா பதறினார்கள்.

உயிர் தோழியின் மரணம்

டிவி போட்டுகொண்டு காயத்தோடு உயிரற்று நீ படுத்திருக்கும் காட்சியை பார்த்து அன்று நான் ஓலமிட்ட அலரல் இன்னும் காதுகளில் கேட்கிறது. உயிர் தோழியின் மரணத்தின் வலியை உன்னால் உணர்கிறேன்.

உளறல்

இது நீ இல்லனு சொல்லி சமாதானப்படுத்த மனசு முயற்சி செய்துக்கொண்டே இருந்துச்சு. உயிரற்ற உடலா நீ இருப்பதை பார்க்க விருப்பம் இல்ல. தனியறையில் பைத்தியம் போல உளறிக்கொண்டிருந்தேன்.

சித்து

போகாத சித்துஎங்களை ஏமாத்திடாத சித்து சித்துனு அன்று நான் புலம்பிய புலம்பல் இன்று வரை தொடர்கிறது. உனக்கு இப்படி நடந்திருக்க கூடாது, சாகுற வயசாடி இது. ஏன்டி சித்து உனக்கு இப்படி ஆச்சு, இப்போ வரைக்கும் உனக்கு என்ன ஆச்சுன்னு எங்களுக்கு தெரியலையே என கூறியுள்ளார்.

நினைவுகள்

உன்னோட நம்பர்ல இருந்து ஒரு அழைப்பு வராதானு மனசு ஏங்குதடி என் செல்லமே. எல்லாத்தையும் வேகமா சாதிச்சிட்டு வேகமாவே போய்ட்டியேடி. உன்னை நினைக்காமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை,என்றும் உன்னை யாரும் மறக்கவில்லை, உன்னை எப்போதுமே மிஸ் செய்வேன். இவ்வாறு தியா மேனன் பதிவிட்டு இருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here