வடகிழக்கு பருவமழை
கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டையே புரட்டிப்போட்டு வருகிறது. ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் நிரம்பி உபரி நீராக வெளியேறுகிறது. சில கிராமங்களில் தண்ணீர் வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வானிலை மையம்
இரண்டு முறை வங்க கடலால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இதனால் 70 சதவீதம் மழை இயல்பைவிட அதிகம் பொழிந்துள்ளது. இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை
அதி கனமழையால் தென்பண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகம் தண்ணீர் வந்ததால் தளவானூர் பகுதியில் தடுப்பணை உடைவு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ஆடுகள்
கொண்டூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் யாசகம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 500 க்கு மேற்பட்ட ஆடுகளை அடைத்து வைத்திருந்தார். அந்த ஆடுகளில் சுமார் 300 ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
தீயணைப்பு துறை
போலீசார், தீயணைப்பு துறையினர் படகுகள் மூலம் 200 ஆடுகளை காப்பாற்றினர். 100 க்கு மேற்பட்ட ஆடுகளை காப்பாற்ற முடியவில்லை.