இன்று மாத சம்பளத்தில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு ஆசை என்றால் அது சொந்த தொழில் துவங்க வேண்டும் என்பது. பெரு நகரங்களில் பணியாற்றுவோருக்கு இந்த எண்ணம் அதிகமாகவே இருக்கும். சொந்த தொழில்களை துவங்க அதிகப்படியான நிதி தேவைப்படும். அதற்கான ஐடியா வை இதில் பார்க்கலாம்.
திட்டம்
மகேஷ் என்பவர் 25 வயதில் பெங்களூரில் மாதம் 65,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 45 வயதுக்கு மேல் கட்டாயம் பிஸ்னஸ் துவங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.
குழப்பம்
மகேஷ்-க்கு சுமார் 20 வருடம் தொழில் துவங்க காலம் உள்ளது. இந்த காலகட்டத்தில் நிலையாக முதலீடு செய்தாலே பணத்தை உருவாக்க முடியும். எவ்வளவு முதலீடு , எந்த திட்டம் என்ற குழப்பம் மகேஷ் -க்கு உண்டு.
முதலீடு
20 வருட காலத்தில் மகேஷ் திட்டமிட்டு இருக்கும் 5 கோடி ரூபாயை தனது 45 வயதில் எஸ்ஐபி திட்டம் மூலம் உருவாக்கலாம். பங்குசந்தையில் முதலீடு செய்பவர்கள் எஸ்ஐபி திட்டம் மூலம் முதலீடு செய்ய முடியும்.
15% வளர்ச்சி
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு கடந்த 25 வருடத்தில் 15 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த 20 வருடத்திற்கு இதேபோன்ற வளர்ச்சியை காண முடியாது. ரீடைல் பணவீக்கம் கடந்த வருடத்தில் 8-10 சதவீதமாக இருந்து தற்போது 5-6 சதவீதமாக உள்ளது.
பங்குசந்தை
20-30 வருடத்திற்கு பங்குசந்தை முதலீட்டில் 11 -12 சதவீதம் வளர்ச்சியை பெற முடியும். பங்குசந்தை வேகமாக வளர்ச்சி அடைய வாய்ப்பு உள்ளது. குறித்த காலகட்டத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட 5 கோடி தொகையை இதனால் பெற முடியும்.
பண்ட் முதலீடு
ஈக்விட்டி மியூச்சவல் பண்ட் முதலீட்டில் மாதம் 50,543 ரூபாய் முதலீடு செய்தால் 25 வயதுடைய மகேஷ் 45 வயதில் கட்டாயம் 5 கோடி ரூபாய் தொகையை பெற முடியும். மகேஷின் 65000 ரூபாய் சம்பளத்தில் இது கட்டாயம் செய்ய முடியாது, இதைச் சாத்தியப்படுத்த ஒரு வழி உள்ளது.
லாபம்
எஸ்ஐபி திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தொகையைக் முதலீடு செய்யும் போது 5 கோடி ரூபாய் இலக்கை எளிதாக எட்ட முடியும். மகேஷ் மாதம் 26,725 ரூபாய் துவங்கி, ஒவ்வொரு வருடமும் 10 சதவீதம் அதிகரித்து கட்டாயம் 5 கோடி ரூபாய் பெற முடியும். 12% லாபம் எஸ்ஐபி முதலீட்டில் இருந்து கிடைக்கும்.
செலவுகள்
மாதம் 50,543 ரூபாய் முதலீட்டை 26,725 ரூபாய் முதலீடாக குறைப்பதன் மூலம் குடும்ப செலவுகளையும் எளிதாக சமாளிக்க முடியும்.