புகார்
டெல்லியில் சாகேத் நீதிமன்றத்தின் நீதிபதி 42 வயதான அவருடைய மனைவி வீட்டிற்கு வரவில்லை என காவல்துறைக்கு இரவு 10 மணியளவில் புகாரினை அளித்துள்ளார். புகாரினை தொடர்ந்து காவல்துறை தீவிர தேடுதலில் ஈடுபட்டது. சிசிடிவி காட்சிகளை பார்த்த போது ஒரு ஆட்டோவில் நீதிபதியின் மனைவி ஏறியது தெரியவந்துள்ளது.
காவல்துறை ஆணையர் கூற்று
நீதிபதியின் மனைவியை தேடும்போது அவர் ஒரு ஆட்டோவில் ஏறியதை கண்டுபிடித்துள்ளோம். அதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனரை தேடி கண்டுபிடித்து விசாரித்தோம். அவர் நீதிபதியின் மனைவியை ராஜ்பூர் குர்த் என்ற ஒரு இடத்தில் இறக்கிவிட்டதாக கூறினார்.

உறவினர் வீடு
நீதிபதியிடம் இது குறித்து விசாரித்த போது அங்கு உறவினர்கள் வீடு இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது நீதிபதியின் மனைவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
கடிதம்
அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வீட்டில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் அவரது முடிவுக்கு யாரும் காரணமில்லை என எழுதி வைக்கப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை மீட்டு தற்போது விசாரணை நடத்திவருவதாக அவர் தெரிவித்தார்.