மாநாடு
மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஆதீனம் கூற்று
பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மார்க் வந்து பாயுது காதினிலே என பாடியிருப்பார். அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை என்றும், அரசியல்வாதிகள் கோவிலில் தர்க்கராக வந்து இருந்து கொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.

அரசியல்வாதிகள்
தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் திருக்கோவிலில் உள்ளது. திராவிட பாரம்பரியம் என சொல்லும் அரசியல்வாதிகள் விபூதியினை பூச மறுக்கிறார்கள் என்றும், ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
விஜய் படம்
இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள் என அவர் மாநாட்டில் கூறியுள்ளார். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் அவரை சங்கி என கூறுவதாகவும் கூறியுள்ளார்.

பணம்
அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள் என்றும், உண்டியல் பணம் கோவிலுக்கு செல்வதில்லை என்றும் கூறியுள்ளார். திராவிட பூமி என சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள் என கூறியுள்ளார். கோவில் இடங்களை ஆளும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் எடுத்துக்கொண்டு குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருவதாக கூறியுள்ளார் ஆதீனம்.