பக்தர்கள்
கேரளாவிலிருந்து வேளாங்கண்ணி மாதா கோவில், நாகூர் தர்காவுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். பக்தர்களின் வசதிக்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
தெற்கு ரயில்வே
கோரிக்கையை ஏற்று எர்ணாகுளத்தில் இருந்து தென்காசி, விருதுநகர், காரைக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கன்னிக்கு புதிய வாராந்திர ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

சங்கத்தினர் வரவேற்பு
தற்போது எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே ரயில்சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த ரயில் திருவாரூருக்கு வந்தபோது சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், வர்த்தக சங்கத்தினர், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கத்தினர் வரவேற்பினை அளித்தனர்.
வேளாங்கண்ணி
ஞாயிற்றுக்கிழமை காலை 5.50 மணியளவில் வேளாங்கண்ணியை வந்தடைந்துள்ளது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வேளாங்கன்னியில் புறப்பாடாகிய இந்த ரயில் 7 மணியளவில் நாகை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. கோடைக்கால சிறப்பு ரயிலை நாகை மக்களவை தொகுதி உறுப்பினர் கொடியினை அசைத்து தொடங்கிவைத்தார்.

கோரிக்கை
இந்த ரயிலை நாள்தோறும் இயக்க வேண்டும் என்றும், சென்னையில் இருந்து திருவாரூர்,காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்துக்கு இயக்கிய ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.