Minister Sivasankar! : பேருந்துகளில் இ-டிக்கெட் குறித்து அமைச்சர் தகவல்!

0
116

போக்குவரத்து துறை அமைச்சர் கூற்று

பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் பயன்படுத்துவதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் அனைத்தும் முடிக்கப்படும் என்றும், அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கேமரா

ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளார். பள்ளி வாகனங்களில் முன் பக்கம், பின் பக்கம் கேமராக்கள் பொறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ-டிக்கெட்

இந்த ஆண்டு இறுதிக்குள் பேருந்தில் பயண டிக்கெட் முறைக்கு மாறாக இ-டிக்கெட் வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டமானது செயல்பாட்டிற்கு வந்த பிறகு கூகிள் பே, மொபைல் ஸ்கேனிங் உள்ளிட்ட முறைகள் மூலம் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here