விலங்குகள்
வேட்டையாடும் விலங்குகளை பார்த்தால் பலரும் பயந்து நடுங்குவர். விலங்குகளின் வேட்டையானது திகிலையும், திகைப்பையும், வியப்பையும் கொடுக்க கூடியது. காட்டில் இருந்து மக்கள் வசிக்கும் இடத்திற்கு சிறுத்தைகள் நுழைவது சமீப காலமாக அதிகரித்துள்ளது.
அச்சம்
நாட்டுக்குள் வந்த சிறுத்தையை பத்திரமாக பிடித்து அவற்றை வனப்பகுதிகளில் விடும் செயல்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. தாக்குதல் என்பது திடீரென நடப்பதால் மக்களின் அச்சத்தை போக்க வலை வீசி விலங்குகளை பிடித்து வருகிறார்கள்.

வீடியோ
அண்மைக்காலமாக இணையதளங்களில் விலங்குகளின் வீடியோ வைரலாகி வருகிறது. விலங்குகளின் சாமர்த்தியமும், பதுங்கி பாயும் குணமும் ஆச்சரியமாக உள்ளது. தற்போது வலைக்குள் அகப்பட்ட சிறுத்தை சீறிக்கொண்டு பிடிப்பவரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.