அமைச்சர்
சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில் கல்லூரி திறக்கப்படுவது குறித்து அவர் பேசியுள்ளார்.
அமைச்சர் கூற்று
இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என அவர் கூறியுள்ளார். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும் என கூறியுள்ளார். மாவட்டங்கள் தோறும் கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

மாணவர் சேர்க்கை
இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், பொறியியல் படிப்புகளில் சேர இதுவரை 85, 902 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் மாணவர்களுக்கு இருக்க கூடாது என முதல்வர் உத்தரவை போட்டுள்ளார். இவ்வாறு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.