வரவுகள்
உலகளாவிய குறியீட்டில் இந்திய அரசு பத்திரங்கள் சேர்க்கப்படும் போது, நாட்டின் நடப்பு கணக்கு, நிதி பற்றாக்குறை போன்றவற்றிற்கு நிதியளிக்க உதவும் சுமார் $30 பில்லியன் செயலற்ற வரவுகளை தூண்டுவதாக கோல்ட்மேன் சாக்ஸ் குரூப் மூலம் குறிப்பிடப்படுகிறது.
இந்திய பத்திரம்
ஒரு குறிப்பில், ஜேபி மோர்கனின் ஜிபிஐ-இஎம் குளோபல் டைவர்சிஃபைட் பாண்ட் இன்டெக்ஸ் இல் நாட்டின் இறையாண்மை பத்திரங்கள் ஆரம்ப 10% வெயிட்டேஜுடன் சேர்க்கப்படலாம் என ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். உலகளாவிய குறியீட்டின் எந்தஒரு பகுதியிலும் இல்லாமல் மிகப்பெரிதாக வளர்ந்துவரும் சந்தைகளில் இறையாண்மை பத்திரச் சந்தையும் ஒன்றாகும்.

சர்வதேச தளம்
யூரோக்ளியர் போன்ற சர்வதேச தளங்களில் இந்திய பத்திரங்களை தீர்வு காண உதவும் வெளிநாட்டினருக்கான வரி மாற்றங்களை செய்வதிலிருந்து புது தில்லி விலகியது. இதனால் குறியீட்டு சேர்க்கை பின்னுக்கு சென்றாலும் கோல்ட்மேனின் மீது நம்பிக்கை வந்துள்ளது.
ஆய்வாளர்கள்
ஜேபி மோர்கன் குறியீட்டில் சீனா, இந்தோனேசிய அரசாங்க பத்திரங்கள் ஒரு பகுதியாக உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவை இதில் சேர்ப்பதால் ஒட்டுமொத்த குறியீட்டின் விளைச்சலை அதிகமாக்கவும், பல வகைகளாக வகைப்படுத்தவும் உதவுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர். இதன் மூலம் இஎம் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி இந்திய அரசாங்கம் உட்பட பல பங்குதாரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

முன்னேற்றம்
வெளிநாட்டில் இருப்பவர்களின் கணக்கு திறப்புகள் இந்தியாவில் தற்போதும் சிரமமாகவே உள்ளது. இதனை நீண்ட கால அவகாசம் மூலம் சமாளிக்க முடியும். மார்ஜின் தேவைகள், நீடிக்கப்பட்ட தீர்வு காணும் நேரங்கள் போன்றவற்றில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ப்ளூம்பெர்க் எல்பி மற்ற வழங்குநர்களின் குறியீடுகளுடன் போட்டியிடும் குறியீடுகளை நிர்வகித்து வருகிறது.