இன்ப்ளூயன்சா வைரஸ்
H1N1 இன்ப்ளூயன்சா வைரஸ் என்பது ஒருவகை தொற்று நோயாகும். இது வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் ஆகும். ஆரம்ப காலகட்டத்தில் இந்த தொற்று பன்றிகளிடையே காணப்பட்டது. இந்த தொற்று நோயானது தமிழகத்தில் தற்போது பரவி வருகிறது. ஏ வகை, பி வகை, சி வகை இன்ப்ளூயன்சா வைரஸ்கள் மக்களை பாதிப்படைய வைத்துள்ளது. இந்த வைரஸ் காற்று அல்லது இருமல் மூலமாக மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துகிறது.

பருவகாலம்
தமிழகத்தில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த பருவநிலை மாற்றம் காரணமாக தமிழகத்தில் மக்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகமாக பரவி வருகின்றன. பருவமழை காலங்களில் காய்ச்சல் அளவு அதிகரிக்கும் என்பதால் இதனை குறித்து அச்சப்படவேண்டாம் என சிலர் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பு
இதுவரை தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்ப்ளூயன்சா வைரஸ் என்ற பன்றிக்காய்ச்சலால் ஒருநாளைக்கு 300 க்கும் மேற்பட்ட நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

முகாம்கள்
தொற்றுக்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளது. மருத்துவ முகாம்களை இன்றைய தினம் முதல் தமிழகத்தில் நடத்த உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த முகாம்கள் மூலம் தொற்றினை குறைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
காய்ச்சலின் சில அறிகுறிகள்
தலைவலி, தும்மல், மூக்கில் நீர்வடிதல், தொண்டைவலி,காய்ச்சல் போன்ற அறிகுறிகள் உடலில் ஏற்படும். தும்மல் ஏற்படும் போது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த பரிசோதனை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படுகிறது.

தடுக்கும் முறை
வீடுகளில் இருக்கும் போதும், வெளியே செல்லும் போதும் கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும். கைகளை சுத்தம் செய்த பின்னர் மட்டுமே பொருள்களை தொட வேண்டும். தும்மல் வரும்போது சிறு துணியால் வாய், மூக்கை மூட வேண்டும். இன்ப்ளூயன்சா வைரசுக்கு எதிரான தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்.