Diwali Ticket Booking: சொந்த ஊர் செல்பவர்களின் தீபாவளி பயணச்சீட்டு முன்பதிவு சற்றுமுன் தொடக்கம்!

0
34

தீபாவளி

வருடத்திற்கு ஒருமுறை கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. 2022 ஆம் வருடம் தீபாவளியானது அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி வருகிறது. இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படும் சிறந்த பண்டிகையாக இது உள்ளது.

புறநகர் பகுதி

தொழில், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக புறநகர் பகுதிகளில் மக்கள் வசித்து வருகிறார்கள். இவ்வாறு வேலை பார்ப்பவர்கள் பண்டிகை தினங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த ஆண்டு வரும் தீபாவளியை கொண்டாடுவதற்காக மக்கள் அவர்களது பயணத்தை திட்டமிட்டு வருகின்றனர்.

முன்பதிவு

அரசு விரைவு பேருந்துகளில் அக்டோபர் 22 ஆம் தேதி பயணம் செய்ய இன்றைய தினம் புதன்கிழமை தீபாவளி முன்பதிவானது தொடங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் 30 தினங்களுக்கு முன்னதாகவே முன்பதிவினை செய்யும் வசதி ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு 3 நாட்கள் முன்னதாக செல்ல நினைப்பவர்கள் இன்றைய தினம் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

முன்பதிவு செய்யவேண்டிய இணையதளம்

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு செல்ல விரும்பும் நபர்கள் www.tnstc.com என்ற இணையதளம் மூலமாக அவர்களது முன்பதிவினை செய்துகொள்ளலாம். பேருந்து நிலையங்களில் சென்று முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவினை செய்து கொள்ளலாம்.

சிறப்பு பேருந்துகள்

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு பயணிகள் சிரமங்களை தடுப்பதற்காக சிறப்பு பேருந்துகளை தமிழக அரசு இயக்குவது வழக்கம் ஆகும். இந்த ஆண்டும் பயணிகள் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. சென்னை மாநகரில் வசிக்கும் மக்கள் ஊர்களுக்கு செல்ல 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here