திருப்பதி
இந்தியாவில் உள்ள மிகவும் முக்கியமான தலங்களில் திருப்பதி ஒன்றாகும். மிகவும் புகழ்பெற்ற இவ்வாலயம் திருப்பதி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு வைணவ தலமாகும். இந்த ஹிந்து கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். பலர் திருப்பதி கோவிலிற்காக நன்கொடைகள் வழங்கி வருகிறார்கள்.
கொடியேற்ற நிகழ்ச்சி
திருப்பதியில் வருகிற 27 ஆம் தேதி அன்று பிரமோற்சவ விழாவிற்கான கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த பெரிய விழாவானது 9 நாட்கள் அக்டோபர் 5 வரை நடைபெற உள்ளது. நேற்றைய தினம் “கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்” நடைபெற்றது.
இஸ்லாமிய தம்பதிகள்
கபினாபானு, அப்துல் கனி ஆகியோர் சென்னையை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள். இவர்கள் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். இவர்கள் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் திருப்பதி கோவிலில் இவர்கள் செய்த செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

நன்கொடை
இஸ்லாமிய தம்பதிகள் ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியை சந்தித்தனர். பின்னர் தலைமை அதிகாரி தர்மா ரெட்டி என்பவரிடம் ஒரு கோடிக்கான காசோலையை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளனர். இவர்கள் கோவிலுக்கு நன்கொடை வழங்குவது முதல் முறை இல்லை, இதற்கு முன்னரும் நன்கொடைகளை வழங்கி வருகிறார்கள்.
பாராட்டு
நன்கொடை வழங்கி சென்ற அந்த தம்பதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவர்களை சமூக ஊடகங்களிலும் பலர் பாராட்டி வருகிறார்கள். மத வேறுபாட்டினை முறியடித்து அவர்கள் செய்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.