சாதி
பல ஆண்டுகளுக்கு முன்னர் பெரியார் முதல் பல சமூக சீர்திருத்தவாதிகள் சாதியினை ஒழிப்பதற்காக கடுமையாக போராடினர். இருபத்தொன்றாம் நூற்றாண்டாகிய தற்போது அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போதும் இந்த சாதி வேறுபாடு முடிவிற்கு வந்ததாக தெரியவில்லை. சில பழமையான கிராமங்களில் வசிக்கும் மக்கள் சாதியை அடையாளமாக பின்பற்றுகிறார்கள்.
கர்நாடக மாநிலம்
கோலார் மாவட்டம் மாலூர் தாலுகாவில் உள்ள கிராமத்தில் ரமேஷ், ஷோபா தபதியினர், அவர்களது மகன் வசித்து வருகிறார்கள். அங்கு ஊர் திருவிழா நடைபெற்றது. அங்கு அந்த குடும்பத்தினர் கலந்துள்ளனர். அந்த சிறுவன் சேத்தன் சாமியுடைய சிலைகளை தொட்டுள்ளான்.

சாதி வெறி
அந்த சிறுவன் சிலையினை தொடுவதை பார்த்த ஆதிக்க சாதியினர் அந்த குடும்பத்தினரை எச்சரித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அவர்களிடம் 60 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த கூறியுள்ளனர். அவர்கள் அந்த அபராதத்தை செலுத்தவில்லை என்றால் தலித்துகள் செலுத்த வேண்டும் என ஆதிக்க சாதியினர் கூறியுள்ளனர்.
புகார்
ஆதிக்க சாதியினரால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் எட்டு பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை குறித்து நடவடிக்கை எடுப்பதாக காவல்நிலையம் கூறியுள்ளது. இந்த சாதிவெறி சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.