எண்ணெய் நிறுவனங்கள்
சர்வதேச சந்தை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் கவனித்து வருகிறது. அந்த நிலவரத்துக்கு ஏற்றவாறு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையினை நிர்ணயம் செய்து வருகின்றன.
திடீர் அறிவிப்பு
மே21 அன்று மத்திய அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பில் பெட்ரோல் மீதான கலால் வரிக்கு 9 ரூபாய், டீசல் மீதான கலால் வரிக்கு 7.50 ரூபாய் குறைப்பதாக வெளியிட்டது. இதன் மூலம் மே மாதம் 23 முதல் பெட்ரோல் விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது.

கச்சா எண்ணெய்
இந்தியா 85% இறக்குமதியால் வரும் கச்சா எண்ணெயினை நம்பி உள்ளது. இந்த நிலையில் உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க மறுத்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெயினை விற்பனை செய்கிறது ரஷ்யா. இதனால் இந்தியாவிற்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறது.
பெட்ரோல், டீசல் விலை
123 ஆவது நாளாகிய இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.