Actress Samantha: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமந்தா! என்ன ஆச்சு சமந்தாவுக்கு?

0
97

சமந்தா

இந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடைசியாக கதீஜா என்ற கதாபாத்திரத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இவர் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதள பக்கத்திலும் ஆக்டிவ் ஆக இருப்பார்.

படங்கள்

சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சகுந்தலம், யசோதா ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பானது பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

மருத்துவமனை

நடிகை சமந்தா எதிர்பாராத நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

காரணம்

நடிகை சமந்தா ஒரு விதமான தோல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமந்தா விரைவில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here