தமிழக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் சேடப்பட்டி முத்தையா காலமானார்!

0
100

குடும்பம்

நான்கு முறை சேடப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் சேடபட்டியார் என அழைக்கப்பட்டார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இரண்டு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

பதவி

இவர் 1991-1996 வரை அதிமுக காலத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவியினை வகித்தவர். பெரியகுளம் மக்களவை உறுப்பினராக 2 முறை பதவி வகித்துள்ளார். 1999 இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தார். அந்த காலகட்டத்தில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து விலகி திமுக கட்சியில் ஈடுபட்டார். திமுகவில் இருந்த போது தேர்தல் பணி குழு தலைவராக கடந்த 16 ஆண்டு காலமாக பொறுப்பு வகித்தார்.

உடல்நலக்குறைவு

மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இவர் 3 மாதங்களாக தொடர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் காலமானார் சேடப்பட்டி முத்தையா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here