+2 மாணவி பள்ளி கழிவறையில் சடலமாக மீட்பு! உடலை வாங்கமறுத்த பெற்றோர்கள்!

0
117

மாணவி

தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் ராமநாதபுரத்தை சேர்ந்த மாணவி படித்து வந்தார். இவர் அங்கு ஒரு விடுதியில் தங்கி 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சடலம்

நேற்றையதினம் இரவு பள்ளி கழிவறையில் மாணவி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை பார்த்த சக மாணவிகள் பள்ளி நிர்வாகத்திற்கு உடனடியாக தகவலினை அளித்துள்ளனர். நிர்வாகம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விசாரணை

போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மாணவி ஒருவாரத்திற்கு முன்பு சித்தி ஒருவர் இறந்த துக்க நிகழ்விற்காக ஊருக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. அங்கிருந்து வந்தபிறகு யாரிடமும் சரிவர பேசாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

உடலை வாங்க மறுப்பு

மாணவியின் உடலை பெற்றோர்கள் வாங்க மறுத்துள்ளனர். மேலும் பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மகளின் உயிரிழப்புக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்றும், காவல்துறை கையெழுத்து கேட்டு கட்டாயப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here