72-year-old woman: நல்லடக்கம் முடிந்தவுடன் உயிருடன் வந்த 72 வயது மூதாட்டி! அங்கு நடந்தது என்ன தெரியுமா?

0
40

மூதாட்டி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா என்பவர். கணவனை இழந்த 72 வயது மூதாட்டி அவரது மகனுடன் வசித்து வந்துள்ளார். இவர் மனநிம்மதிக்காக அடிக்கடி கோவிலுக்கு சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். நேற்றைய தினம் சந்திரா சிங்கப்பெருமாள் பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.

அதிர்ச்சி

இரவு வரை மூதாட்டி வீட்டிற்கு வராததால் அவரது மகன் எங்கும் தேடி சென்றுள்ளார். அப்போது அவனுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. ரயிலில் அடிபட்டு மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறியுள்ளனர். இதனை அறிந்தவுடன் அங்கிருந்த உறவினர்கள் அனைவரும் மூதாட்டியை பார்க்க சென்றுள்ளனர். விபத்தில் மூதாட்டியின் உடல் தெரியாததால் உருவத்தை வைத்து அவனது அம்மா என உடலை பெற்று வந்துள்ளனர்.

சோகம்

உடல் விபத்தில் படுகாயம் அடைந்துள்ள நிலையில் நீண்ட நேரம் வைக்காமல் உடனடியாக மயானத்திற்கு கொண்டு செல்ல பட்டுள்ளது. அனைத்து சடங்குகளும் முடிவடைந்த பின்னர் அனைவரும் சோகத்தில் அமர்ந்திருந்துள்ளனர்.

உயிருடன் வந்த மூதாட்டி

அனைவரும் சோகத்தில் இருந்த நிலையில் இறந்து போனதாக சொல்லப்பட்ட மூதாட்டி அங்கு வந்து அனைவரின் முன் நின்றுள்ளார். இதனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தது அவர் இல்லை என விளக்கியுள்ளார்.

விசாரணை

ரயில் விபத்தில் சிக்கி இறந்த மூதாட்டி யார் என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடக்கம் செய்யப்பட்டவர் யார் என யாருக்கும் தெரியாத நிலையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here