அதிர்ச்சி
சீரியல் நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்துகொண்ட செயல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அவரது கணவர் காரணம் என இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளிவந்த ஹேம்நாத் அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக புகார் அளித்தார்.

சித்ராவின் தோழி
சித்ராவின் தோழியான சீரியல் நடிகை ரேகா இந்த செய்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சித்ராவும், ஹேம் நாத்தும் தங்கியிருந்த வீட்டில் காண்டத்தை வைத்துள்ளார்கள். கணவன் மனைவி ஏன் அவ்வளவு வைத்திருக்க வேண்டும் என கேட்டுள்ளார் தோழி. சித்ராவுக்கு கெட்டபழக்கம் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

குற்றச்சாட்டு
பிரேத பரிசோதனை முழுவதுமாக செய்திருந்தால் அனைத்தும் தெரிந்திருக்கும் என கூறியுள்ளார். நல்லவன் போல காட்டிக்கொள்ள பொய்யான குற்றச்சாட்டுக்களை ஹேம்நாத் கூறி வருகிறான் என கூறியுள்ளார். சித்ரா மட்டுமின்றி பல பெண்களுடன் தொடர்பில் இருந்த புகைப்படங்கள் அவரிடம் இருப்பதாக கூறினார்.

கர்ப்பம்
ஹேம்நாத் கர்ப்பமாக்கி பின் கருவினை கலைத்த பெண் அவரை திருமணம் செய்துகொள்ள காலில் விழுந்த பிறகும் அவன் மறுத்திருக்கிறான். அவனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.