திருமணம்
24 வயதான ஒரு பெண்ணை கல்யாணம் செய்துகொள்ள சொல்லி பலமுறை தொந்தரவு செய்துள்ளார் ஒரு இளைஞர். அந்த பெண் அதனை மறுத்ததால் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றால் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார்.

ஆசிட் வீச்சு
அந்த பெண் இதற்கு பயந்து வியாழக்கிழமை காலை தந்தையோடு வேலைக்கு சென்றுள்ளார். இரவு நேரம் வேலை முடித்துவிட்டு வரும்போது அலுவலகத்தின் படிக்கட்டிலே நின்று திருமணம் செய்துகொள்ள கேட்டுள்ளார். அந்த பெண் மறுத்ததால் அவர் மீது ஆசிட்டை வீசிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பித்து தலைமறைவாகியுள்ளான்.

அடையாளம்
பெண்ணின் மீது ஆசிட் அடித்தவர் ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் 27 வயதுடைய நாகேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காவல்துறையினர் இவரை தேடி வருகிறார்கள்.

பெண்ணின் உடல்நிலை
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் முகம், கழுத்து, கைகள், தலையில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞரின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.