கடும் எதிர்ப்பு
பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ என்ற படம் மார்ச் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ மிக பெரிய சிக்கலில் சிக்கியது. இந்த படத்தில் சமூக வன்மையை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இதனால் நடிகர் சூர்யாவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

வன்னிய சமூகம்
இதனால் வன்னிய சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. நடிகர் சூர்யா அவர் மீது தவறு இல்லை என்று அறிக்கையில் கூறியுள்ளார். இந்த செயல் வன்னிய சமூக மக்களுக்கு கோவத்தை வர வைத்துள்ளது. அதன் பிறகு சூர்யாவின் அடுத்த படம் வெளி ஆன அப்புறம் பாத்துக்கலாம் என வ வன்னிய சமூகத்தினர் கூறியுள்ளன.

சத்யராஜ்
அதனை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் காவேரி பிரச்னையால் கர்நாடகாவிலுள்ள மக்களை கோவமாக பேசியுள்ளார். அதனால் அவர் நடித்த ‘பாகுபலி 2’ என்ற படத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளன. இந்த பிரச்சனையால் கர்நாடகாவில் பாகுபலி படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் நடிகர் சத்யராஜ் மக்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
காவேரி விவாகரத்து
நடிகர் சத்யராஜ் காவேரி விவகாரத்தின் போது பேசின வார்த்தைகள் கஷ்டமாக இருக்கும் என நினைக்கிறேன். நான் என்றைக்குமே கன்னட மக்களுக்கு எதிரானவன் கிடையாது. இதுவரை நான் நடித்த எல்லா படமும் கர்நாடகாவில் வெளியாகியுள்ளது ஆனால் இதுவரை எந்த ப்ரோப்ளேமும் இல்லை.

வருத்தத்தை தெரிவிக்கும் சத்யராஜ்
கன்னட படங்களில் என்னை நடிக்க அழைத்தார்கள் டைம் இல்லாத காரணத்தால் என்னால் நடிக்க இயலவில்லை. நான் உங்களை பேசிய வார்த்தை கஷ்டமாக இருந்ததால் தான் 9 வருடத்திற்கு பிறகு மன்னிப்பு கேட்க்கிறேன். அதன் பின் பாகுபலி 2 படத்தை எந்த பிரச்சனையும் இல்லாமல் கர்நாடகாவில் வெளி வந்தது.

சூர்யா
இந்த நிலையில் சூர்யா நடித்த எ’தற்கும் துணிந்தவன்’ என்ற படத்திற்கு வன்னிய சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் சத்யராஜை போலவே வருத்தம் தெரிவிக்க போவதாக கூடப்படுகிறது.