Actress Meena: நடிகை மீனா வெளியிட்ட வீடியோ வைரல்! தோழிகளின் முயற்சி வெற்றி!

0
194

நடிகை மீனா

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. மீனா ரஜினி,கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்த படங்கள் வெற்றி படங்களாக திகழ்ந்தது. இவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. கடைசியாக ரஜினி நடித்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

சோகம்

நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் சில வாரங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் காலமானார். அவர் காலமானதை அடுத்து மீனாவும், அவரது மகளும் பெரும் சோகத்தில் இருந்தனர். மீனா அவரது தாலியை செயின் ஆக மாற்றி போட்டார் என்றும் தகவல் வெளியானது.

தோழிகளின் முயற்சி

மீனாவிற்கு கலா மாஸ்டர், சங்கவி, சங்கீதா, ரம்பா ஆகிய தோழிகள் இருந்தனர். அவர்கள் மீனாவை பழைய நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் செய்து வந்தனர். மீனாவை கட்டாயப்படுத்தி வெளியே அழைத்து சென்றுள்ளனர். சமீபத்தில் மீனாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியதாக தகவல் வெளியானது.

வீடியோ

தோழிகள் அவரை பழைய நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது. மீனா சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மீனா கேட்வாக் நடப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் மீனா பழையநிலைக்கு மாறியது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here