Saturday, May 21, 2022
HomeCinemaSreenidhi Sudarshan! : மனஅழுத்ததில் இருக்கும் நடிகை ஸ்ரீநிதி சுதர்ஷன்! காரணம் என்ன?

Sreenidhi Sudarshan! : மனஅழுத்ததில் இருக்கும் நடிகை ஸ்ரீநிதி சுதர்ஷன்! காரணம் என்ன?

ஸ்ரீநிதி

நடிகை ஸ்ரீநிதி சுதர்ஷன் 2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் அறிமுகமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீநிதியின் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் சமீபத்தில் வெளியான வலிமை படத்தினை குறித்து அவரது கருத்தை பகிர்ந்துள்ளார்.

தோழி

ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி வலிமை படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ளார். படத்தை பார்த்து வெளியில் வந்ததும் மீடியாக்கள் அவரிடம் படத்தினை குறித்து கேட்டுள்ளனர். அதற்கு படத்தை பார்ப்பதற்கு வலிமையும், பொறுமையும் தேவை என்றும், ஆனால் அந்த பொறுமை எனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். பைக் படத்தை விட அதிகமாக ஓடுகிறது என கூறினார்.

வீடியோ

அவர் வலிமை படத்தை விமர்சித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். அஜித் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ஸ்ரீநிதிக்கு எதிராக மீம்ஸ் போட்டு வருகிறார்கள். அவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் ஸ்ரீநிதி சமீபத்தில் பகிர்ந்துள்ளார்.

பதிவு

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தனது வாழ்க்கையில் எளிதில் எதுவும் கிடைக்கவில்லை என்று பகிர்ந்துள்ளார். அவர் மனசோர்வுடன் இருப்பதாகவும், அழுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது எனவும் சமீபத்தில் பதிவினை போட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments