நடிகை
தற்காப்பு கலைஞரான நடிகை ஜாரா ஃபிதியான், பெனடிக்ட் கம்பெர்பாட்ச் நடித்த டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தில் நடித்ததற்காக புகழ் பெற்றார். இந்த படம் 2016 ஆம் ஆண்டு உலகளாவிய வெற்றி படம் ஆகும்.

அதிர்ச்சி
2002-2003 வரை அவரது 13 வயதில் அவரும், 59 வயது கொண்ட கணவர் விக்டர் மார்க்கும் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு பெண் குற்றம் சாட்டினார். இந்த வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி
இது தவறு என எனக்கு தெரியும் என்றும், சூழ்நிலையிலிருந்து எப்படி வெளியேறுவது என்று தெரியவில்லை என்றும் சிறுமி நீதிமன்றத்தில் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

நீதிமன்றம்
சிறுமியின் மீதான பாலியல் வன்கொடுமைகளில் 14 எண்ணிக்கையிலான கொடுமைகளுக்கு நடிகையும், அவரது கணவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் கண்டு பிடித்துள்ளது.