Monday, May 23, 2022
HomeTamil NewsAgni star! : மக்களை வாட்டும் அக்னி நட்சத்திரம் மே 4 துவக்கம்! ஒரு மாதம்...

Agni star! : மக்களை வாட்டும் அக்னி நட்சத்திரம் மே 4 துவக்கம்! ஒரு மாதம் வரை நீடிக்கும் வெயில் காலம்!

கோடை வெயில்

கடந்த வாரம் முதல் கோடை வெயில் அதிகமாகி உள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 110 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகி உள்ளது. வரும் 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலம் துவங்க இருக்கிறது. இந்த வெயில் 28 ஆம் தேதி வரை நீடிப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வெப்பநிலை அதிகரிப்பு

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு படி மார்ச் முதல் மே மாதம் வரை கோடை காலம். தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் இயல்பு அளவினை விட 3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என அறிவித்துள்ளது.

நேற்றைய நிலவரம்

அதிகபட்சமாக திருத்தணி, வேலூரில் 107 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 41 டிகிரி, மதுரை, காஞ்சிபுரம், கரூர் பரமத்தி 40 டிகிரி, சேலம், ஈரோடு 39 டிகிரி, சென்னை விமான நிலையம் தருமபுரி தஞ்சாவூர், திருநெல்வேலி 38 டிகிரி வெப்பநிலைகள் பதிவானது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments