Saturday, May 21, 2022
HomeTamil NewsAirtel, jio Best Fiber Plans! : ஏர்டெல், ஜியோ நிறுவனத்தின் சிறந்த Fiber திட்டங்கள்!

Airtel, jio Best Fiber Plans! : ஏர்டெல், ஜியோ நிறுவனத்தின் சிறந்த Fiber திட்டங்கள்!

ஏர்டெல், ஜியோ போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் அதிவேக பைபர்நெட் Boardband இணைப்பை எளிய ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்டு திட்டங்களுடன் வழங்குகின்றன. குறைந்த விலை முதல் பிரீமியம் திட்டங்கள் வரை இரு நிறுவனங்களும் வழங்கின்றன.

ஜியோ Fiber திட்டங்கள்

ரூபாய் 300 குறைந்த விலை திட்டத்தில் உங்களுக்கு 30Mbps வேகத்தில் 3,300ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் OTT நன்மைகள் உங்களுக்கு வழங்கப்படவில்லை. ரூபாய் 699 திட்டமும் 3,300 GB டேட்டா 100Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு OTT நன்மைகள் கிடைக்காது.

ரூபாய் 999 திட்டம்

இந்த திட்டத்தில் 150 Mbps வேகத்தில் 3,300GB டேட்டா கிடைக்கிறது. OTT ரசிகராக இருந்தால் இந்த திட்டமானது உங்களுக்கு சிறந்ததாக இருக்கும். இதில் நீங்கள் டிஸ்னி +ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோ உட்பட 16 OTT பயன்பாடுகளை கொண்டுள்ளது.

ரூபாய் 2,499 திட்டம்

விலையுயர்ந்த திட்டமான இதில் உங்களுக்கு 500 Mbps வேகத்தில் 4,000 GB டேட்டா, OTT பயன்பாடுகளுக்கான அணுகல் போனறவற்றை வழங்குகிறது. அதிக டேட்டா தேவைப்பட்டால் இது உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

ஏர்டெல் Fiber திட்டங்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் மலிவான திட்டமான ரூபாய் 499 திட்டத்தில் 40Mbps வேகத்தில் 3,300GB டேட்டா, 7 OTT தளங்கள், 5 ஸ்டூடியோ பயன்பாடுகளுக்கான அணுகல் போன்றவற்றை வழங்குகிறது. ரூபாய் 799 திட்டமானது 200 Mbps வேகத்தில் 3,300 ஜிபி டேட்டா, ஏழு OTT அணுகல், ஐந்து ஸ்டுடியோ பயன்பாடுகள் போன்றவற்றை வழங்குகிறது.

ரூபாய் 999 திட்டம்

இந்த திட்டத்தில் பயனர்கள் 200 Mbps வேகத்தில் 3,300 GB டேட்டா, OTT, ஏர்டெல் ஸ்டுடியோ பயன்பாடுகளின் அணுகலும் கிடைக்கிறது. விலையுயர்ந்த திட்டமான ரூபாய் 3,999 திட்டத்தில் உங்களுக்கு 1 Gpbs இணைய வேகத்தை வழங்குகிறது. பல OTT, ஸ்டுடியோ பயன்பாடுகளையும் இந்த திட்டமானது கொண்டுள்ளது.

கட்டணம்

ஏர்டெல், ஜியோ Fiber இணைப்புகளை பெறுவதற்கு பயனர்களிடமிருந்து Installaiton கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. ஏர்டெல் திட்டத்தை எடுக்கும்போது கூடுதலாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும். ஜியோ இணைப்புக்கு பயனர்கள் கட்டணமாக ரூபாய் 1,500 செலுத்த வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments